Friday 26 June 2009

எழுதுகோல்!

சிறுவயதில்

எனது

விரல் பிடித்து

எழுதபழக்கிய

அம்மாவின்

விரல்!

வலிந்து நான்

இழுத்துக்கொண்டிருக்கும்

உறக்கத்தை,

என் மீது

ஊர்ந்தபடி

விரட்டிக்கொண்டிருக்கிறது

உனது பிரிவு!

துரத்துவதும்

துரத்தபடுவதுமாய்
அலையோடு

விளையாடிக்கொன்டிருந்தாள்

சிறுமி!

வைத்த கண்

வாங்காமல்

ரசித்துவிட்டு

நகர்ந்தபின்தான்,

காணவில்லையென

கவனித்து

திரும்பி

பார்த்தேன்....

அவளது

கரம் கோர்த்தபடி

குதியாட்டம்

போட்டுக்கொண்டிருந்தது

என் மனசு!

கடற்கரை
ஈரத்தில்

உன்கரம் பற்றி

கதை பேசியபடி

காலாற நடந்திருந்தேன்

ஏதோ நினைவில்

திரும்பில் பார்த்தேன்,

எனது பாத சுவடருகே

காணப்படாத

உனது பாத சுவடு

நினைவுறுத்தியது

நீயில்லாத தனிமையை.....!