துளி 18
கூட்டினை
சுமந்தலையும்
நத்தையைப் போல
திரிகிறேன்
உன்னைச் சுமந்து
.
Wednesday, 21 March 2012
Tuesday, 17 January 2012
ஆலமும் அமிர்தமும்
துளி 17
பித்து பிடிக்கச் செய்துவிட்டாய் என்று
கோபித்துக் கொண்ட பொழுதில்
முத்தத்தைக் கையூட்டாக கொடுத்து
தப்பிச் செல்லும்
குழந்தையைப் போலும்
நழுவிச் செல்கிறாய்
விழிகள் ஒளிரும்
ஆழமானதொரு புன்னகையை
பரிசளித்தபடி
.
பித்து பிடிக்கச் செய்துவிட்டாய் என்று
கோபித்துக் கொண்ட பொழுதில்
முத்தத்தைக் கையூட்டாக கொடுத்து
தப்பிச் செல்லும்
குழந்தையைப் போலும்
நழுவிச் செல்கிறாய்
விழிகள் ஒளிரும்
ஆழமானதொரு புன்னகையை
பரிசளித்தபடி
.
Thursday, 12 January 2012
ஆலமும் அமிர்தமும்
துளி 16
பரணின் மூலையில்
ஒண்டியிருக்கும்
அணில் பிள்ளையென
கிறீச்சிட்டுக் கொண்டேயிருக்கிறது
என் இரவுக்குள் நுழைந்த
உன் காதல்
.
பரணின் மூலையில்
ஒண்டியிருக்கும்
அணில் பிள்ளையென
கிறீச்சிட்டுக் கொண்டேயிருக்கிறது
என் இரவுக்குள் நுழைந்த
உன் காதல்
.
Subscribe to:
Posts (Atom)