Friday, 18 December 2009

ஒன்றா? இரண்டா?


"பெடம்மா (பெரியம்மா)
அத புடி"
காதினில் விழுகிறது - எனது
சின்னஞ்சிறு தேவனின் குரல்,
நடந்து செல்லும் என்னை
கடந்து செல்கிறது ஒரு ஆட்டுக்குட்டி!

"குடு (குரு) phone ஐ எங்க?"
குட்டி நண்பனின்
கேள்வியாய் ஒலிக்கிறது,
செல்லிடபேசியின் மணியோசை!

"அம்மாதான் என் best friend"
என் பாலாவின்
வார்த்தைகளாய் விரிகிறது,
நண்பர்கள் தினத்தின்
குறுஞ்செய்தி வாழ்த்துகள்!

"பிச்சி பூ ன்னா
உனக்கு பைத்தியமாச்சே
அதான் வாங்கினேன்" - என்னும்
பூங்கொடி அத்தையின்
பிம்பம் தெரிகிறது,
நீர் நிறைந்து ஓடும்
தாமிரபரணியில்!

"யாரிடமும் அதீத
அன்பு கொள்ளாதே"
மனதின் குரல் கேட்கிறது,
நெருக்கமானவர்களையும்,
விருப்பமானவர்களின்
நெருக்கத்தினையும்
இழக்க நேரும்போதெல்லாம்!

"சில நேரங்களில் சில நிகழ்வுகள்"


(‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது.)

34 comments:

பூங்குன்றன்.வே said...

//"யாரிடமும் அதீத
அன்பு கொள்ளாதே"
மனதின் குரல் கேட்கிறது,
நெருக்கமானவர்களையும்,
விருப்பமானவர்களின்
நெருக்கத்தினையும்
இழக்க நேரும்போதெல்லாம்!//

அடப்போங்க...கண்கலங்க வைச்சுட்டீங்க கல்யாணி! ரொம்ப பிடித்திருக்கு !!!

பூங்குன்றன்.வே said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்..(கண்டிப்பா வெற்றி தான்)

ரிஷபன் said...

"யாரிடமும் அதீத
அன்பு கொள்ளாதே"
பிரச்னையே அதானே.. பார்த்தா உடனே மனசு குட்டிக் குழந்தை மாதிரி தாவிடுது.. பிரியம் காட்டத்தானே மனசுனு. அப்புறம் இழப்பின வலி தாங்கற சக்தி இல்லாம தவிக்கிறப்ப.. உங்க வரி ஞாபகம் வரும்.. ஆனா மனசு மாற மாட்டேங்குதே

நிலாரசிகன் said...

நன்று.வாழ்த்துகள்.

அண்ணாமலையான் said...

மனதின் வலி
மானுடத்தின் வலி
புரிந்துகொண்டு வேலி அமைத்து பழகினால்
வலியை தவிர்க்கலாம்..

ராமலக்ஷ்மி said...

//"சில நேரங்களில் சில நிகழ்வுகள்"//
அருமையான கவிதை. வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!

கமலேஷ் said...

ரொம்ப நல்ல இருக்குங்க..

goma said...

அதீத அன்பு கொள்ளவும் கூடாது அதீத அன்புக்குள் அடங்கவும் கூடாது...
பிரிவுத்துயர் அடையவும் வேண்டாம்
பிரிவுத்துயரைத் தரவும் வேண்டாம்

நேசமித்ரன் said...

வாழ்த்துகள்

அன்பின் வலிதொனிக்கும் இவ்வடிகள் வென்று வரும் பரிசில்

priyamudanprabu said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்..

புலவன் புலிகேசி said...

நல்லா இருக்குங்க...

புலவன் புலிகேசி said...

போட்டியில் வெற்றியடைய வாழ்த்துக்கள்

தமிழ் said...

/"யாரிடமும் அதீத
அன்பு கொள்ளாதே"
மனதின் குரல் கேட்கிறது,
நெருக்கமானவர்களையும்,
விருப்பமானவர்களின்
நெருக்கத்தினையும்
இழக்க நேரும்போதெல்லாம்!

"சில நேரங்களில் சில நிகழ்வுகள்"/''

அருமை

வாழ்த்துகள்

aazhimazhai said...

அருமையா இருக்குங்க !!!! என்ன பண்றது நம்ம மனசு அப்படிதாங்க !!! எததனை முறை வலிபட்டாலும் வலி தேடி விழையும் உள்ளங்கள் ரணத்தின் எச்சங்களோடு சுகம் காணும் சுவடுகள்....

rvelkannan said...

அடேயப்பா... அருமையான கவிதை
வெற்றி பெற வாழ்த்துக்கள்

thiyaa said...

அருமையான கவிதை.
வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!

இன்றைய கவிதை said...

அடடா!
அடடே!

-கேயார்

thiyaa said...

ஆகா அருமை

லெமூரியன்... said...

நல்லா இருக்குங்க....!
வாழ்த்துக்கள் கல்யாணி.

நினைவுகளுடன் -நிகே- said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ரொம்ப நல்ல இருக்குங்க..

காயத்ரி said...

//"சில நேரங்களில் சில நிகழ்வுகள்"//

ரொம்ப ரொம்ப உண்மைங்க.... இயல்பா சொல்லி அழ வெச்சுட்டீங்க....

சில நேரங்களில்!!!
ஊமை விழிகளின் உயிர்வலி கூட புரிவதில்லை
பேசும் இதழ்களின் பிதற்றல்களும் ஒலிக்கின்றன.
சில நேரங்களில்!!!
நா வறழும் நேரம் நீர் கூட கிடைப்பதில்லை
நீரால் இழுக்கப்பட்டு பிணம் கூட கிடைப்பதில்லை
சில நேரங்களில்!!!
சோகத்தின் தருணங்களில் இரு விழி நீர் கூட விழுவதில்லை
சிரிப்பின் சிகரத்திலும் இதழ் கூட விரிவதில்லை
சில நேரங்களில்
சில நிகழ்வுகளில் - சிக்கித்தவிக்கும்
சில மனிதர்கள்!!!-

அன்புடன் கவிநா...

(Mis)Chief Editor said...

Mrs OK,

U started it again...!
Not able to understand:(

Why cant you give 'vilakkavurai' or 'pozhippurai'?

-MCE

(Mis)Chief Editor said...

Please add 'puriavillai' in 'abhiprayam':)

-MCE

Vidhoosh said...

அருமையான கவிதைங்க.
வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!

butterfly Surya said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

கமலேஷ் said...

கவிதை மிக அழகாய் இருக்கிறது...
வெற்றி பெற என் மனபூர்வ வாழ்த்துக்கள்..

பா.ராஜாராம் said...

நான் ஏற்கனவே சொன்னதுதான் கல்யாணி.கண்டிப்பா வெற்றி பெரும்!அச்சில் பார்க்க இன்னும் அழகாய் இருக்கிறது..இருக்கும்!

Paleo God said...

"யாரிடமும் அதீத
அன்பு கொள்ளாதே"
மனதின் குரல் கேட்கிறது,
நெருக்கமானவர்களையும்,
விருப்பமானவர்களின்
நெருக்கத்தினையும்
இழக்க நேரும்போதெல்லாம்!//

உண்மை. வெற்றி பெற வாழ்த்துக்கள். ::))

(ரொம்ப நாளாக படித்து பின்னூட்டமிட வரும்போது malware என்று செய்தி வந்ததால், வரமுடியாமல் போய்விட்டது. இன்றைக்குத்தான் எந்த தடங்கலும் இல்லாமல் படிக்க முடிந்தது.)

அன்புடன் அருணா said...

அருமையான கவிதை
வெற்றி பெற வாழ்த்துக்கள்!

பித்தனின் வாக்கு said...

நல்ல கருத்துக்கள். தத்துவங்கள் நிறைய இருந்தாலும், மனது எங்காவது ஒன்றிக் கொண்டு தவிப்பது இயற்கைதானே. நல்ல கவிதை. நன்றி.

கல்யாணி சுரேஷ் said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. தனித்தனியே நன்றி சொல்ல நேரமில்லை. பா.ராஜாராம் அண்ணா வழியில் சொல்வதானால் எல்லோருக்கும் நன்றியும் அன்பும் மக்கா. புத்தாண்டு வாழ்த்துகளும்கூட.

ராமலக்ஷ்மி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அண்ணாமலையான் said...

நம்ம பக்கம் உங்க ஓட்டும் கமெண்டும் காலியா இருக்குது.. சீக்கிரம் வந்து ரெண்டயும் போட்டா சந்தொஷம்..

Thenammai Lakshmanan said...

மிக அருமை வெற்றி பெற வாழ்த்துகிறேன்

Post a Comment