Saturday, 7 August 2010

ஆலமும் அமிர்தமும்

துளி 1.

வேண்டியதெல்லாம் கேள்
கடவுள் சொன்னார்
ஒற்றை வரமாய்
பெற்று வந்தேன்
உன்னை மட்டும்.

துளி 2.

ஆர்ப்பரித்துக் கொட்டும்
அருவி போலும்
உன் காதல்.
மூச்சடைத்த போதும்
நனைந்து கொண்டேயிருக்கிறேன்
விலகாமல்.

துளி 3.

நீள்கின்றதான காலம்
சேமித்துக் கொண்டிருக்கிறது
முத்தங்களையும்
கண்ணீர்த் துளிகளையும்.

4 comments:

பா.ராஜாராம் said...

விடுபட்டு போயிருந்த கவிதைகள் எல்லாம் வாசித்தேன் கல்யாணி.

சந்தோசமா இருக்கு. தொடர்ந்து எழுது.

"உழவன்" "Uzhavan" said...

அருமையான துளிகள்.

இன்றைய கவிதை said...

கல்யாணி சுரேஷ்

அருமையான் வரிகள் சேமித்துக்கொண்டிருக்கிறது காலம் முத்தங்களையும் கண்ணீர் துளிகளையும் மட்டுமல்ல என் போன்ற வாசகர்களையும் சேர்த்து

நன்றி ஜேகே

சூர்யா - மும்பை said...

துளி இரண்டு அற்புதமான வடிவம்.

Post a Comment