Thursday, 1 October 2009

தவிக்கும் உயிர்.


சரமாரியாய்
தொடுக்கின்றாய்
விஷம் தோய்த்த உன்
வார்த்தைக் கணைகளை.
மழைக் கம்பிகளை
ஏந்துதல் போலும்
தாங்கிக் கொள்கிறேன் நான்.
அனுதினமும் எனை
அபிஷேக்கிறாய்
அனலேறிய உன் பார்வையால்.
நெருப்பினை விழுங்கிவிட்டு
நீரினைக் குடித்து
தணித்துக் கொள்கிறேன்.
சாவினைச் சுமந்தென்னை
துரத்துகின்ற
என்னிடமிருந்தான உன்
விலகலுக்கும்
வாழ்வினை நோக்கி எனை
இழுத்துச் செல்லும்
உன் மீதான என்
காதலுக்குமிடையில்
சிக்கித் தவிக்கிறது
எனது உயிர்.


.

19 comments:

velji said...

'அப்பா,வலிக்குதுப்பா...' என என் மகள் என்னிடம் சொல்லும் எளிய வார்த்தைகளில் அமைந்த கவிதை.உயிரின் தவிப்பை பார்க்கிறேன்.
GREAT!

(Mis)Chief Editor said...

அட்டகாசம்! சராசரியான ஆண்களின் உணர்வுகளைப் பிரதிபலித்ததற்கு நன்றி மேடம்!

+Ve Anthony Muthu said...

அருமை தங்காய்.
சோகத்தையும் சுகமாகத் தெளிக்கிறது கவிதை.

सुREஷ் कुMAர் said...

//
சரமாரியாய்
தொடுக்கின்றாய்
விஷம் தோய்த்த உன்
வார்த்தைக் கணைகளை....
//
பாவம்..
யாருங்க உங்கள இவ்ளோ திட்டுறது..
சொல்லுங்க.. வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிடலாம்..

கல்யாணி சுரேஷ் said...

@ velji
நன்றி velji.

@ (Mis)Chief Editor
நன்றி (Mis)Chief Editor

@ +VE Anthony Muthu
நன்றி அண்ணா.

@ सुREஷ் कुMAர்
உங்க வருகைக்கும் அன்பிற்கும் நன்றி . கவிதை வெறும் கற்பனைதான். அதற்கு ஏன் வன்முறையை கையில் எடுக்கணும்? (அதுவும் காந்தி பிறந்த நாளில்)

வேல் கண்ணன் said...

காதலிக்கும்(?) அனைவருக்கும் (சில வேளைகளில் மட்டும்)
இருக்கும் உணர்வை அழகாய் சொல்லியிருக்கும் கவிதை
வாழ்த்துக்கள்... தொடர்க....

கல்யாணி சுரேஷ் said...

@ வேல் கண்ணன்
Thanks Kannan.

இன்றைய கவிதை said...

உங்கள் உணர்வுக்கு நன்றி!
அருமையான கவிதை!
என்னுடைய கூட்டிற்கு வரவேற்கிறேன்!

உங்களுக்கு என்னைப் பிடித்துப் போனால்,
அது 'காக்காய்' பிடித்தலாகுமா?!

வேல் கண்ணன் said...

11.10.2009 தேதியிட்ட கல்கியில் உங்களது கவிதை வாழ்த்துக்கள்
மேலும் மேலும் உயர்வதற்கும்...

பா.ராஜாராம் said...

நல்லா இருக்குடா,கல்யாணி.படத்தேர்வு நம் பயல்கள்(ரமேஷ்,கண்ணா) போல நல்ல அக்கறையும் ஈடுபாடும்!

நேசமித்ரன் said...

மிக மெல்லிய மொழியில் தெளிவாக பேசுகிறது உணர்வுகளை

பா.ராஜாராம் said...

விருது ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் சந்தோசம் எனக்கு.அது இங்கே: http://karuvelanizhal.blogspot.com/2009/10/blog-post.html

கல்யாணி சுரேஷ் said...

@ இன்றைய கவிதை
வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றி.


@ பா.ராஜாராம்
நன்றி அண்ணா.

@ நேசமித்ரன்
வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றி.

பித்தனின் வாக்கு said...

good i read it today only

கல்யாணி சுரேஷ் said...

@ பித்தனின் வாக்கு
thanks.

Anonymous said...

very good kuzhanthai nalla ezhuthudi amma

கல்யாணி சுரேஷ் said...

@ Anonymous
Thanks aunty or uncle.

கமலேஷ் said...

கவிதை மிகவும் வலி உடையதாக இருக்கிறது...
நல்ல கவிதை...

கல்யாணி சுரேஷ் said...

@ கமலேஷ்
Thanks kamalesh.

Post a Comment