நீ என் மார்பினில்
கிடந்துறங்கிய காலங்களில்
மேனியெங்கும் உடையென
படர்ந்திருந்தது உன் வாசனை.
எனை கட்டிக்கொண்டு
தூங்கிய போதுகளில்
எனதருகினில் இருக்கையிட்டு
அமர்ந்திருந்தது
அதே வாசனை.
தனித் தனி அறைகளில்
தூங்கிய போது
காற்றினில் வரும்
நறுமண புகையென
கரைந்து விட்டிருந்தது
அந்த வாசனை.
உனது மடியினில்
நானுறங்க வேண்டிய நாட்களிலோ,
நீராழி கடந்தொரு
தேசத்தில் நீயும்
நினைவுகளில் வாசனை
எச்சங்களோடு
நானும்
.
21 comments:
எங்கடா கல்யாணி?வேலையா?..
கவிதை ரொம்ப பிடிச்சு இருக்கு.படத்தேர்வு மிக அருமை!
நல்ல வரிகள்
//நீராழி கடந்தொரு
தேசத்தில் நீயும்.......
நினைவுகளில் வாசனை
எச்சங்களோடு நானும்!//
அருமைங்க..
நல்ல கவிதை.(தீ...பா..வ..ளி.......முடிந்ததா!)
தீபாவளிக்குப் பொறவு உறங்கிட்டீயன்னு நெனக்கேன்!
பொட்ல தெரிச்சாப்ல கவிதைய போட்டு தூக்கத்தைக் கெடுத்திட்டீயளே!!
-கேயார்
நலம் தானே,
கவிதை நல்ல இருக்கு, வாழ்த்துக்கள்
@ பா.ராஜாராம்
கொஞ்சம் வேலைதான் அண்ணா. கருத்தினுக்கு நன்றி.
@ சந்ரு
நன்றி நண்பரே.
@ பிரியமுடன்...வசந்த்
நன்றி வசந்த்.
@ velji
நன்றி velji.
@ இன்றைய கவிதை
என்ன என்னைய பத்தி இப்படி நினச்சுட்டீக? கொஞ்சம் சோலி கிடந்துச்சு, அதனாலதேன்....... கருத்துக்கு நன்றிங்க.
@ வேல் கண்ணன்
நன்றி கண்ணன். நலமா? நலமே.
உனது மடியினில்
நானுறங்க வேண்டிய நாட்களிலோ,]]
:(
எச்சம் இதுவே மிச்சம்.
கவிதையும் படமும் அருமைங்க. பதிவுக்கு நன்றீங்க.
இவன். வி.என்.தங்கமணி
www.vnthangamani.blogspot.com
@ நட்புடன் ஜமால்
@ வி.என்.தங்கமணி
வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றி. தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.
நல்ல கவிதை ....நல்ல படம் ..!
கவி வரிகளால் கனக்கிறது மனம்!
நன்றி ஜீவன்.
நன்றி கருணாகரசு.
எச்சம், சரி!
சொச்சம் எங்க?!!
தீபாவளிக்கப்புறம் நாங்க நிம்மதியாத்தானே இருந்தோம்?!
@ (Mis)Chief எடிட்டர்
நிம்மதியை பறித்துக் கொண்ட வரிகளுக்காக மன்னிக்கவும். இப்படி எழுதக்கூடாதுன்னு தான் நானும் நினைக்கிறேன். ஆனா........
கருத்தினுக்கு நன்றி.
அருமை கல்யாணி சுரேஷ் கலக்கிட்டீங்க ...
நன்றி - ஜேகே
@ இன்றைய கவிதை
நன்றி ஜே.கே.
அருமையான கவிதை மக்கா.
படம் எங்க அம்மாவ நினைவூட்டுது.
கவிதையும் கூட.
நன்றி.
@ சாம் தாத்தா
வாங்க. என்ன ரொம்ப நாளா ஆள காணோம்?
Post a Comment