Sunday, 6 December 2009

நானும் நீயும்


என் தனிமையில்
நிரம்பியிருப்பவை
மௌனமும்
கவிதையும்
மட்டுமல்ல,
நீ கூடத்தான்!
எனது வெறுமையில்
உடனிருப்பது
மெல்லிசை
மட்டுமல்ல,
உன் நினைவுகளும்தான்!

21 comments:

பூங்குன்றன்.வே said...

உணர்வுள்ள கவிதை..நல்லா இருக்கு

தமிழ் உதயம் said...

தனிமை வேறு, வெறுமை வேறா

அன்புடன் மணிகண்டன் said...

எளிமையான ஆனால் அருமையான வரிகள்...

ரிஷபன் said...

சின்னதா ரசனையா சொல்லி இருக்கீங்க..

இன்றைய கவிதை said...

என் வெறுமையில்
நிரம்பியிருப்பவை
மௌனமும்
கவிதையும்
மட்டுமல்ல,
நீ கூடத்தான்!
எனது தனிமையில்
உடனிருப்பது
மெல்லிசை
மட்டுமல்ல,
உன் நினைவுகளும்தான்!

இப்படி போட்டிருந்தால் நல்லாருக்குமோ?!

-கேயார்

(Mis)Chief Editor said...

this is a better one, madam!

கல்யாணி சுரேஷ் said...

@ பூங்குன்றன்.வே
நன்றி பூங்குன்றன்.

@ tamiluthayam
நிச்சயமா. என்னை சுற்றி எத்தனை பேர் இருந்தாலும் தனிமையாய் உணரும் போது வெறுமையை உணர்கிறேன்.

@ அன்புடன் மணிகண்டன், ரிஷபன்
முதல் வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றி. தொடர்ந்து வருகை தரவும்.

@ இன்றைய கவிதை
பெரும்பாலான எனது கவிதைகளை என் தனிமைதான் தருகிறது. மெல்லிசை மட்டுமே எனது வெறுமையை நிரப்புகிறது. அதனால்தான்........
தொடர் வருகைக்கு நன்றி.

@ (Mis)Chief Editor
தொடர் வருகைக்கு நன்றி.

நினைவுகளுடன் -நிகே- said...

நானும் புதுசா வந்திருக்கிறேன். என்னையும் உங்களின் வலைக் குழாமில் இணைத்துக் கொள்ளுங்கள்.

rvelkannan said...

ரொம்ப நல்ல இருக்கு கல்யாணி

rvelkannan said...

ரொம்ப நல்ல இருக்கு கல்யாணி

கல்யாணி சுரேஷ் said...

@ நினைவுகளுடன் -நிகே
இணைத்துக் கொண்டாயிற்று.

aazhimazhai said...

இந்த தலைப்பு மற்றும் முகப்பு படம் என்னை ஈர்த்தது முதலில் ..... ( இதே படம் இதே தலைப்பு என் வலை தலத்தில் நீங்கள் பார்க்கலாம் )http://aazhaimazhai.blogspot.com/2009/11/blog-post_11.html

உங்க கவிதை ரொம்ப அருமையா இருக்கு

கல்யாணி சுரேஷ் said...

@ velkannan

நன்றி கண்ணன்.

@ aazhimazhai

அட ஆமாங்க. ஆச்சரியமா இருக்கு. முதல் வருகைக்கு நன்றி.

விக்னேஷ்வரி said...

ம், நல்லாருக்குங்க.

கல்யாணி சுரேஷ் said...

@ விக்னேஷ்வரி
நன்றிங்க.

நினைவுகளுடன் -நிகே- said...

கவிதை சிறிது
உணர்ச்சி பெரிதோ பெரிது

நினைவுகளுடன் -நிகே- said...

கவிதை அருமை
தனிமையின் சுமையை
கவியில் தந்தது அழகு

கல்யாணி சுரேஷ் said...

@ நினைவுகளுடன் -நிகே
Thanks.

பா.ராஜாராம் said...

நீ என்ன எழுதினாலும் அண்ணனுக்கு பிடிக்கும்டா.அண்ணனை விலக்கிவிட்டு பார்த்தாலும், இது பிடிச்சிருக்கு.

அதனால்,வெரிகுட்!

கல்யாணி சுரேஷ் said...

@ பா.ராஜாராம்
'காக்கைக்கும் தன் குஞ்சு...........' மாதிரியா? எப்படியோ உங்க அன்புக்கு நன்றிண்ணா.

Sakthi said...

very good..!

Post a Comment