Monday, 14 December 2009

புன்னகை வெளிச்சம்


ஜன்னல் வழியே
யானையை கண்டு
கை தட்டி சிரித்தாள்
சிறுமி
விசையை தட்டியதும்
அறையெங்கும் பரவும்
மின்விளக்கின் ஒளியென
இரயில் பெட்டியெங்கும்
பரவியது புன்னகை


.

19 comments:

தமிழ் உதயம் said...

கவிதை நன்றாக இருந்தது.

நிலாரசிகன் said...

அற்புதம்! இதைவிட எப்படி இக்கவிதையை பாராட்டுவது?

புளியங்குடி said...

ஒற்றைக் குயில்? தலைப்பிலேயே ஒரு கவிதையை எழுதிவிட்டீர்கள். ஏனிந்தப் பேர்?

ப்ரியமுடன் வசந்த் said...

குட்..

அண்ணாமலையான் said...

பாராட்டுக்கள்..

இளவட்டம் said...

:-))))

rvelkannan said...

இவைகளை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது என்பார்கள்.
நிலவு, கடல், யானை , இரயில், குழந்தை.
இதில் மூன்றை உள்வாங்கிய கல்யாணியின் இந்த கவிதையும் சலிக்காது போலிருக்கிறது.

(Mis)Chief Editor said...

நல்ல கவிதை...
வர வர 'மரமண்டை'க்கும் புரிவது போல எழுதுகிறீர்கள்!

-பருப்பு ஆசிரியர்

இளவட்டம் said...

:-)))))

sathishsangkavi.blogspot.com said...

//மின்விளக்கின்
ஒளியென
இரயில் பெட்டியெங்கும்
பரவியது புன்னகை!//

எதார்த்தமான வரிகள், அழகா இருக்கு.......................

நேரம் இருந்தா என்னோட பதிவை பாருங்களேன்..........
http://sangkavi.blogspot.com/

கல்யாணி சுரேஷ் said...

@ tamiluthayam
@ நிலாரசிகன்

நன்றி.

@ புளியங்குடி
முதல் வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றி புளியங்குடி. இந்த பேருக்கு பெருசா காரணம் ஒண்ணுமில்ல. ஒற்றைகுயிலோசை பிடிக்கும். அவ்வளவுதான். உங்க பேருக்கு என்ன காரணம்?

@ பிரியமுடன்...வசந்த்
நன்றி வசந்த்.

@ அண்ணாமலையான், இளவட்டம்
வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றி.

@ velkannan
//கல்யாணியின் இந்த கவிதையும் சலிக்காது போலிருக்கிறது.// நிஜமாவா? நன்றி கண்ணன் உங்க அன்பிற்கு.

@ (Mis)Chief எடிட்டர்
தொடர் வருகைக்கு நன்றி.

@ Sangkavi
வாங்க sangkavi . நானும் கண்டிப்பா வர்றேன்.

ராமலக்ஷ்மி said...

வாசிப்ப்வரையும் தொத்திக் கொள்கிறது அழகாய பரவிய அந்தப் புன்னகை. வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் said...

மிக அழகுங்க பாராட்டுக்கள்

ரிஷபன் said...

வாசித்தவர்களுக்கும் பரவும் புன்னகை..

இன்றைய கவிதை said...

அருமை!

மின்விளக்கின்
ஒளியென
இரயில் பெட்டியெங்கும்
புன்னகை!

என்றிருந்தால்கூட நீங்கள் நினைத்தது
போலிருந்திருக்கும்!

-கேயார்

பா.ராஜாராம் said...

வாவ்!

கல்யாணி,ரொம்ப பிடிச்ச கவிதை இது.அதனால்,வெரிவெரி குட்!

கல்யாணி சுரேஷ் said...

@ ராமலக்ஷ்மி
நன்றி.

@ சி. கருணாகரசு
பாராட்டுக்கு நன்றி.

@ ரிஷபன்
உலகெங்கும் பரவட்டும் புன்னகை.

@ இன்றைய கவிதை
கருத்தினுக்கு நன்றி.

@ பா.ராஜாராம்
நன்றிண்ணா.

aazhimazhai said...

அந்த சிறுமியும் சிரிப்பை போல உங்க கவிதையும் பிரகாசமா இருந்தது

கல்யாணி சுரேஷ் said...

@aazhimazhai
Thanks

Post a Comment