Monday, 23 August 2010

அன்புள்ள அண்ணா





அன்புள்ள அண்ணா
நலமா னு கேட்க வழியில்லை. இன்றைக்கு சகோதரர்கள் தினமாம். பெண்கள் தங்கள் சகோதரனுக்கு ராக்கி கட்டி, அவர்களின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்யும் நாளாம். நானும் உனக்காக வாழ்த்து அட்டையெல்லாம் வாங்கி விட்டேன். ஆனால் நீதான் என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், முகவரியும் தராமல் நெருங்க முடியாத தொலைவிற்கு சென்றுவிட்டாய்.

உனது நீண்ட ஆயுளுக்கென வேண்டிக் கொள்ள வேண்டிய இந்த நாளில் உனது ஆன்ம சாந்திக்காக வேண்டிக் கொள்ளச் செய்த கடவுளை என்ன சொல்லி நொந்துகொள்வது?

எனது ஒவ்வொரு பதிவும் உனது கருத்தினைக் கேட்ட பின்பு பதிவிடப்படுவதே வழக்கம். இன்றைய எனது இந்த பதிவினை குறித்த கருத்தை நான் யாரிடம் போய் கேட்பது?

மாறாத அன்புடன்
கல்யாணி.

வலையுலக நண்பர்களே,
எனது இனிய சகோதரனும், நண்பனும், வழிகாட்டியும் எல்லாவற்றிற்கும் மேலாக எனது நலம் விரும்பியுமான சக பதிவர் திரு.நேர்மறை அந்தோணிமுத்து (http://positiveanthonytamil.blogspot.com/) அவர்கள் நேற்று இறையடி சேர்ந்துவிட்டார்கள். எனது சகோதரனின் ஆன்ம சாந்திக்காக இறைவனை வேண்டிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

10 comments:

VELU.G said...

ஆழ்ந்த வருத்தங்கள் சகோதரி

ராமலக்ஷ்மி said...

என் ஆழ்ந்த அஞ்சலிகள். அவரது ஆன்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கிறேன்.

Anonymous said...

அவரது ஆன்மா சாந்தியடைய ப்ரார்த்திக்கிறேன்

பா.ராஜாராம் said...

நேற்றிரவு டோண்டு சார் பதிவு பார்த்தே அறிந்தேன். மிகுந்த அதிர்ச்சி. உடன் உன் நினைவுதான் வந்தது. உன் மூலமாக அறிந்த சகோதரர் இவர். வேறு ஒன்னும் சொல்லத் தெரியலடா கல்யாணி.

அஞ்சலிகள்.

rvelkannan said...

ஆழ்ந்த அனுதாபங்களுடன் நானும் வெறுப்பாக பார்க்கிறேன் மரணத்தையும் வாழ்வையும்

ராஜா சந்திரசேகர் said...

நேர்மறை அந்தோணிமுத்துவின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

இன்றைய கவிதை said...

தங்கள் அன்பு நெகிழ வைக்கிறது, தங்கள் அண்ணண் ஆத்ம சாந்திக்காக் நானும் வேண்டிக்கொள்கிறேன்

நன்றி ஜேகே

அன்புடன் நான் said...

திரு அந்தோணிமுத்துக்கு எனது அஞ்சலி.

ரிஷபன் said...

ஆழ்ந்த இரங்கல்கள்.
அவர் எங்கே போய் விட்டார்.. எங்கிருந்தாலும் அவரது ஆசி உங்களுடன்.

கல்யாணி சுரேஷ் said...

எனது சோகத்தில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து நல் இதயங்களுக்கும் வணக்கங்கள்.

Post a Comment