Wednesday, 19 August 2009

பிடித்ததாய்
சமைத்தேன்....
பார்த்து பார்த்து
பசியாற்றினேன்...
விரும்பியதை
வேண்டும் முன்
தந்தேன்....
நள்ளிரவில்
கழுத்தை
கட்டிக்கொண்டு
தூங்கும்போதுதான்
யோசித்தேன்...
நாளையுடன்
விடுமுறை
முடிவதை
எப்படி சொல்வது....
விடுதியிலிருந்து
விடுமுறையில்
வீடு வந்த
தங்கையிடம்!

2 comments:

கண்ணன் said...

எல்லாருக்குமான கவிதை
//தங்கையிடம் //
இந்த உறவு மட்டும் மாறிக்கொள்ளும்

கல்யாணி சுரேஷ் said...

thanks kannan

Post a Comment