அரவம் மிகுந்த
சாலையில்
அனைவரும்
பார்க்க
டாட்டா காட்டிவிட்டு..
வெயிலுக்கு
இதமாய்
பறக்கும் முத்தத்தை
வீசி சென்றான்...
சில அடிதூரம்
சென்று
திரும்பிப் பார்த்தேன்..
கூடுதலாய்
குறும்பு
புன்னகையையும்
பரிசளித்துச்
சென்றான்...
அம்மாவின்
தோளில் சாய்ந்தபடி!
.
மெழுகுவத்தி அணையும் வரை...
3 days ago
3 comments:
மிகை இல்லாத கவிதை தொடருங்கள்...
வாழ்த்துகள் உங்களின் வலைப்பூ முழுவதும் படித்தேன்
கவிதைகள் அனைத்தும் இனிமை
வாவ். அருமை..
மனதிற்கு இதமான கவிதை.
வாழ்த்துகள்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
Post a Comment