Thursday, 27 August 2009

வழியெங்கும்...

வழியெங்கும்
உன் முகம் தேடி
அலைகின்றதென்
பார்வை!
உயிர் தீண்டும் - உன்
பார்வைக்கென
பரிதவிக்கும் - என்
உள்ளம்!
உனைச் சேராமல்
இதழ்களில்
தேங்கி நிற்கும்
என் முத்தம்!
உன் செவி
உணருமோ - என்
உயிர் துடிக்கும்
சத்தம்!

2 comments:

கார்ல்ஸ்பெர்க் said...

அருமையான கவிதை!!! எனக்குக் கூட புரிகிறது :)

கல்யாணி சுரேஷ் said...

வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றி கார்ல்ஸ்பெர்க். அதென்ன 'எனக்கு கூட'?

Post a Comment