எனது
உற்சாகம் உனையும்
பூக்கச் செய்வதாய்
கூறினாய்....
எனது
மௌனம் உனை
மரிக்கச் செய்வதாய்
மறுகினாய்...
எனது
பார்வை உனை
பலவீனமாக்குவதாய்
பதறினாய்....
எனது
வார்த்தைகள்
மனதின் காயங்களுக்கு
மருந்தென கூறி
மகிழ்ந்தாய்...
உனது பிரிவு
எனது
மரண சாசனமென - ஏனோ
மறந்துவிட்டாய்!
மெழுகுவத்தி அணையும் வரை...
3 days ago
1 comment:
//உனது பிரிவு
எனது
மரண சாசனமென - ஏனோ
மறந்துவிட்டாய்! //
நெஞ்சை வதைக்கும் வரிகள் தோழி
Post a Comment