Wednesday, 26 August 2009

மரணத்தினும் கொடிது..!

பகிர்தலுக்கு
ஏதுமின்றிப் போக
மௌனத்தால் உரையாடுகிறாய்.
மரணத்தினும்
கொடியதாம் பிரிவு
பிரிவினும் வலிது
உன் மௌனம்.
உனக்கான
என் வார்த்தைகளை
உனக்குள்ளேயே
தொலைத்துவிட்டு
நானும்
மௌனத்தில்
மூழ்குகிறேன்



.

2 comments:

கண்ணன் said...

//நானும்
மௌனத்தில்
மூழ்குகிறேன்! //
மூழ்கியது மெளனத்தில் மட்டும் அல்ல என்று தோன்றுகிறது தோழி.
கவிதை நன்று!

கல்யாணி சுரேஷ் said...

Thanks Kannan.

Post a Comment