Wednesday, 16 September 2009

அம்மாச்சி

எல்லா வீட்டிலும்
இருக்கக் கூடும் - ஒரு
கதை சொல்லி!
எங்கள் வீட்டிலும்
இருந்ததுண்டு.
மந்திர தந்திர
கதைகளில்
ஆர்வம் வளர்த்தவள்....
நிலாச் சோற்றின்
சுவை காட்டியவள்....
பெண்மையின் வரம்புகள்
அறிவுறுத்தியவள்....
தாய்மையின் அருமையை
உணர்த்தியவள்.....
அம்மாவுக்கு மட்டுமில்லாமல்
எனக்கும்
அம்மாவானவள்...
இருந்தவரையில்
இதமளித்ததில்லை நான்.....
ஏனோ இப்போது
தவிக்கின்றேன்....
கடைசியாய்
கொடுத்து போன
புடவையில்
அவள் வாசம்
உணர்கிறேன்!

13 comments:

கண்ணன் said...

//நிலச் சோற்றின்
சுவை காட்டியவள்....
தாய்மையின் அருமையை
உணர்த்தியவள்.....
அம்மாவுக்கு மட்டுமில்லாமல்
எனக்கும்
அம்மாவானவள்...//
தாய்மையின் அன்பு தெரிகிறது
தவிப்பும் தெரிகிறது .

கல்யாணி சுரேஷ் said...

நன்றி கண்ணன்.

Radhakrishnan said...

நிலச் சோற்றில் என்பது நிலாச் சோற்றில் என இருக்க வேண்டுமோ?

//இருந்தவரையில்
இதமளித்ததில்லை நான்.....//

நீங்கள் அப்படி நினைத்திருந்தாலும அவர் அப்படி நினைத்திருக்க மாட்டார்.

நல்லதொரு கவிதை அனுபவம்.

பா.ராஜாராம் said...

ரொம்ப நெகிழ்வான வெளிப்பாடு கல்யாணி.//கடைசியாக கொடுத்துப்போன அவள் சேலையில் அவள் வாசம் உணர்கிறேன்//கண்கள் கலங்கியது.கருவேலநிழலில்,உங்கள் பின்னூட்டமும் திடுக்கிட வைத்தது.அருமையாய்,மனசிறக்குகிறீர்கள்.வாழ்த்துக்கள் கல்யாணி!

பித்தனின் வாக்கு said...

பொரியோர்கள் இருக்கும் வரை அவர்கள் அருமை புரிவதில்லை, இறந்தபின் அவர்கள் அருகாமை கிடைப்பதில்லை. நல்ல பதிவு.

கல்யாணி சுரேஷ் said...

நன்றி ராதாகிருஷ்ணன். கருத்தினுக்கும். பிழையினை சுட்டிகாட்டியதற்கும்.பிழை திருத்தப்பட்டு விட்டது.

நன்றி ராஜாராம்.

நீங்கள் சொல்வது கூட உணமைதான் பித்தன். வருகைக்கும் கருத்தினுக்கும் மிக்க நன்றி.

ஜெனோவா said...

Nanraaga Irukkirathu Kalyaani madam, kanapoluthil en paatiyum ninaivukku vanthu ponaal...

Mannichukonga, office la Tamil font illa ;-(

Vaalthukkalum & Nanriyum
Jenova

+Ve Anthony Muthu said...

சில சொந்தப் பிரச்சினைகள் காரணமாக உடனே வர முடியலைம்மா.

இங்கே நீ சொல்லியுள்ளது எனக்கும் நிகழ்ந்திருக்கிறது.

உனக்கு அம்மாச்சி.

எனக்கு அம்மா அப்பா.

உன் வலியை முழுமையாய் உணர முடிகிறது.

கல்யாணி சுரேஷ் said...

நன்றி ஜெனோவா.

நன்றி அண்ணா.

velji said...

கவிதை நன்றாயிருக்கிறது!எளிமையாய் கவிதை சொல்லும் பாணியும்,கவிதக்கு மட்டுமான வலைத்தளமும் கவனிக்க வேண்டியவை.
ஒரு இடைவெளிக்குப்பின் தளத்திற்கு வந்திருக்கிறேன்...கடின உழைப்பு தெரிகிறது!வாழ்த்துக்கள்!

கல்யாணி சுரேஷ் said...

நன்றி velji .

(Mis)Chief Editor said...

//கடைசியாய்
கொடுத்து போன
புடவையில்
அவள் வாசம்
உணர்கிறேன்!//

'தொட்டுப்போன புடவையில்'
என்றால் நன்றாயிருந்திருக்குமோ?

கல்யாணி சுரேஷ் said...

(Mis)Chief Editor
எங்க பாட்டி கடைசியாய் எனக்கு கொடுத்த புடவையை பற்றி சொல்லியிருக்கேன்.

Post a Comment