கிடைத்த காலம்
கொஞ்சமென்றாலும்
வாழ்ந்த பொழுதுகள்
அதிகம்தான்.......
முடிவில்
மனம் கனத்தாலும்
ஒன்றுமில்லாததாய்
வெறுமையான உணர்வு!
நிலைத்திருக்கும்
நிஜமில்லை,
கரைந்து விடும்
கானல்தான்....
ஆயினும்
போ(வே)கும் வரையிலும்
தித்திடும் எண்ணங்கள்!
விடுமுறை முடிந்து
பள்ளி செல்கையில்
முதுகில்
புத்தகச் சுமையோடு,
இனிமையான நாட்கள்
மனதிலும்........
வேலைக்குப் போகும்
இன்று வரையிலும்
அந்த
கோடைவசந்தம்
எனக்குப்
பிள்ளைப்பருவம்தான்!
மெழுகுவத்தி அணையும் வரை...
3 days ago
7 comments:
//கிடைத்த காலம்
கொஞ்சமென்றாலும்
வாழ்ந்த பொழுதுகள்
அதிகம்தான்.....//
பிழைப்புதானே நட்க்கிறது.வாழ்ந்தது பிள்ளைப்பிராயத்தில்தான்.
நல்ல கவிதை!
நல்லா இருக்குடா..கல்யாணி.
@ velji
நன்றி velji .
@ பா.ரா.
நன்றி அண்ணா.
கோடை வசந்தம் எப்போது வருமென காத்திருந்த காலம். சந்தோஷங்கள் நிரம்பியவை.
1983-ஆம் வருட கோடை விடுமுறையில் (மே-10) விபத்து என் உடல் நிலையை பலிகொண்டது.
பிறகும் ஒவ்வொரு கோடை விடுமுறைக்காக ஆவலாய்க் காத்திருப்பேன்.
அண்ணன் பிள்ளைகளும், தங்கையும், என்னோடு எப்பவும் இருந்து தனிமை போக்குவார்களே...?
அதற்காகவே.....
கோடை விடுமுறைகள் சந்தோஷம் நிரம்பியவை.
ஃப்ளஷ்பேக் கொண்டு வந்த தங்கைக்கு நன்றி.
+VE Anthony Muthu
தங்கைக்கு நன்றி சொல்லுதல் தேவைதானா அண்ணா?
பதிவை விட பின்னூட்டங்களில் சுவாரஸ்யமும் இருக்கிறது, பாச மலர்களும் இருக்கின்றன!
ஞாபகம் வருதே?, 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே?' போன்ற பாடல்களை நினைவூட்டும் கவிதை!
நேற்றைய பொழுதுகளில்
இன்று தொலைந்துபோய்....
நாளை என்னதான் செய்யப்போகிறோம்?!
@(Mis)Chief Editor
//நேற்றைய பொழுதுகளில்
இன்று தொலைந்துபோய்....
நாளை என்னதான் செய்யப்போகிறோம்//
நேற்றைய பொழுதுகளில் தொலைந்து போக தேவை இல்லையே? நேற்றைய பொழுதுகளின் இனிய நினைவுகள் தரும் உற்சாகத்தில் இன்றைய பொழுதினையும், நாளைய பொழுதினையும்கழிக்கலாமே.
Post a Comment