ஒரு மழை நாளில்
சந்தடி ஏதுமற்ற
சாலையில்தான் எனைக்
கடந்து சென்றாய் ......!
என் மனதினுக்கும்
உன் மனதினுக்கும்
மழை பாலமானது.....!
பார்வை மட்டுமே
பாஷை என்றிருந்து - பின்
புன்னகை கூட மொழியானது....!
சிறு சிறு வார்த்தைகள்
சினேகம் வளர்க்க,
நட்பின் தென்றல் தீண்டி - நம்
நேசம் மலர்ந்தது.........!
உனதன்பை வெளிப்படுத்திய- அந்த
விநாடியிலிருந்துதான்
உன்னை நேசித்த நான்
மழையையும் நேசித்தேன்.....!
உன்னுடன் கரம் கோர்த்து
நனைந்தபடி நடந்து சென்ற
மழை நாள் இன்னமும்
மனதினுள் ஈரமாகவே........!
இப்போதும்....
மழையின் தூறலைத்
தீண்டும்போது கூட - உன்
கரம்பற்றுவதான உணர்வு....!
மழையும் நம்மிருவருடன்
வாழ்வின் அங்கமாயிற்று...!
இன்றும் மழை நாள்தான்.....!
மழையில் நனைந்தபடி நானும்
என்னுள் கரைந்தபடி மழையும்...!
நீ மட்டுமில்லாத தனிமையில்.......?
17 comments:
//இன்றும் மழை நாள்தான்.....!
மழையில் நனைந்தபடி நானும்
என்னுள் கரைந்தபடி மழையும்...!
நீ மட்டுமில்லாத தனிமையில்.......?//
சோகத்தைப் பிரதிபலித்தாலும் சுகமான கவிதை. மழை யாவருக்கும் மகிழ்ச்சி தந்தாலும், எனக்கு சோகத்தை (சுகமான) தரும்.
சோகம் கூட ஒரு சுகானுபவம்தான். இருந்தாலும் எனது எழுத்து படிப்பவர்க்கு சோக நினைவுகளை தருதுன்னு நினைச்சா கொஞ்சம் கஷ்டமா இருக்குண்ணா.
பேசாம 'ஈரம்' படத்துக்கு நீங்க பாட்டெழுத போயிருக்கலாம்....
அப்டியே மழைல நனஞ்ச ·பீலிங்!
தப்பா நெனச்சுக்காதீங்க...
இந்த 'கழுதை'க்கும் உங்க 'கவிதை'க்கும் தூரம் அதிகம்தான்!
அது சரி, நீங்க சுரேஷ் அவர்களுக்குச் சொந்தமா?
உங்க பேரும் சுரேஷ்-ல முடியுது?!
அருமையான கவிதைடா கல்யாணி.தலைப்பும்,படமும் மிக நேர்த்தி.தலைப்பு மட்டும் தனி கவிதை.good!go ahead.
@(Mis)Chief Editor
வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றி.
//அது சரி, நீங்க சுரேஷ் அவர்களுக்குச் சொந்தமா?
உங்க பேரும் சுரேஷ்-ல முடியுது?!//
அந்த சுரேஷ் க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. என்னோட பேருக்கு பின்னாடி இருக்கிற சுரேஷ் என்னோட கணவர்.
@பா.ராஜாராம்
நன்றி அண்ணா.
ஆம்,புகைப்படங்களாக அல்லது நினைவூட்டும் பொருள்களாக அருகில் இருக்க கால ஓட்டதில் எத்தனை உறவுகளை இழக்கவேண்டியதாகிறது.
மனதில் பெய்த மழை இன்று ஊருக்கு மட்டும் பெய்கிறது!
அருமையான கவிதை!
நன்றி velji.
ரொம்ப நல்ல இருக்கு படமும் கவிதையும்
முக்கியமாக கவிதையும் தலைப்பும்
Thanks Kannan
hi kalyani
romba nalla irukkunga unga kavaithaigal pidichurukkunga oh sorry nga pidichiruntha very good solla solli irukkeengalla very good
by
ungal nanban
yenna yaarnu theriyalaiya? nama nerla santhichirukkomunga
sathiyamanga
@ Anonymous
நன்றி நண்பா. (நீங்க உங்க பேர்லயே பின்னூட்டமிட்டிருக்கலாம்.) மன்னிக்கணும் நீங்க யாருன்னு தெரியல.
good afternoon your kavithaikal are super not only super there is no words to congrats your creature
@ Anonymous
உங்க பேரை சொல்லியிருக்கலாமே?
Anyway thanks for the comment.
nice one...
@ Venkadesh
Thanks.
இன்னுமொரு மழைக்கவிதை மனதை நனைத்துவிட்டு...
அருமைங்க.
Thanks sundara.
Post a Comment