Thursday, 30 April 2009

உனது

குரலை

நினைவுறுத்தும்

காதினில் விழும்

வார்த்தைகள்...

உனது

இயல்பினை

பதிவு செய்யும்

கண்களில் நிறையும்

காட்சிகள்...

கவிதை

கற்றுத்தரும்

உனது

மௌனங்கள்...

இதழ்கோடியில்

சிறுபுன்னகையை

நெளியவிடும்

உனது

குறுந்தகவல்கள்...

நாம்

சந்தித்த

உச்சிவெயிலின்

வெம்மை கூட

வாழ செய்கிறது

நமது

நட்பினை...!

Wednesday, 29 April 2009

உன்னுடன்

பேசாதிருந்தும்

ஜீவித்திருக்கிறது

நமது நட்பு!

உனது

குரல் மட்டும்

கேட்டபடியே