Saturday 12 September 2009

வாழ்வின் உயிர்


உண்பதுவும்
உடுப்பதுவுமே
இயந்திரத்தனமான
பின்னரும்......
உன் கரம் கோர்த்து
நடை பயின்ற
தடங்களும்,
உன் தோள் சாய்ந்து
கதை பேசிய
கணங்களின்
நினைவுகளுமே
மிஞ்சி நிற்கும்
வாழ்வினுக்கு
உயிரூட்டுகின்றன!

8 comments:

வேல் கண்ணன் said...

அருமை.
உண்மைதான். முன்பிருந்த அழகிய
நினைவுகளில் கழிகிறது இன்றைக்கான வாழ்வு

பா.ராஜாராம் said...

நல்லா இருக்குங்க கல்யாணி.

கல்யாணி சுரேஷ் said...

நன்றி கண்ணன்.

கல்யாணி சுரேஷ் said...

நன்றி ராஜாராம்.

சாம் தாத்தா said...

//உண்பதுவும்
உடுப்பதுவுமே
இயந்திரத்தனமான
பின்னரும்......

உன் கரம் கோர்த்து
நடை பயின்ற
தடங்களும்,

உன் தோள் சாய்ந்து
கதை பேசிய
கணங்களின்
நினைவுகளுமே...

மிஞ்சி நிற்கும்
வாழ்வினை
சாகடிக்கின்றன..! //

ஹும்..!
எனக்கு என் பழைய பெரும் சோகம்
நினைப்பு வருது கண்ணு!

இப்ப நினைச்சாலும் மனசெல்லாம் குளமாகி, கண்வழியே தளும்பி வழியும்.

கொஞ்ச நாளா மறந்திருந்தேனென்று நம்பிக் கொண்டிருந்தேன்.

படைப்போடு வாசகனும் ஒன்றிப் போகுமளவு எழுதும் திறன் (அதுவும் சில வரிகளிலேயே) உனக்கு வாய்த்திருக்கிறது.

வாழ்த்துக்கள்!

கல்யாணி சுரேஷ் said...

நன்றி சாம்.

(Mis)Chief Editor said...

இது 'அம்மாச்சி'யை நினைத்து எழுதியதோ?

கல்யாணி சுரேஷ் said...

@(Mis)Chief Editor

//இது 'அம்மாச்சி'யை நினைத்து எழுதியதோ?//

ஏங்க இது அம்மாச்சியை நினைத்து எழுதிய மாதிரியா தெரியுது?

Post a Comment