
நீ என் மார்பினில்
கிடந்துறங்கிய காலங்களில்
மேனியெங்கும் உடையென
படர்ந்திருந்தது உன் வாசனை.
எனை கட்டிக்கொண்டு
தூங்கிய போதுகளில்
எனதருகினில் இருக்கையிட்டு
அமர்ந்திருந்தது
அதே வாசனை.
தனித் தனி அறைகளில்
தூங்கிய போது
காற்றினில் வரும்
நறுமண புகையென
கரைந்து விட்டிருந்தது
அந்த வாசனை.
உனது மடியினில்
நானுறங்க வேண்டிய நாட்களிலோ,
நீராழி கடந்தொரு
தேசத்தில் நீயும்
நினைவுகளில் வாசனை
எச்சங்களோடு
நானும்
.