Sunday 1 August 2010

யெளவனம்.

இசையும்
கவிதையும்
குறித்ததான
நமது விவாதங்களில்
அன்றைக்கு இடம்பெற்றது
யெளவனம் குறித்ததோர்
உரையாடல்.

கட்டுடலும்
காதல் நிறைந்த
கண்களும்
கவர்ந்திழுக்கும்
புன்னகையும் கொண்டிருக்கும்
காதலின் நுழைவாயிலா
கேட்டேன்

நரைத்த பின்னும்
வெளிறிடாத நேசமும்
கருணை பொழியும்
விழிகளும்
நட்பினை உடுத்திருக்கும்
புன்னகையும்
மனங்களின் தொடுகையில்
சுகம் காணும்
முதுமை கூட
பதில் தந்தாய்
புன்னகை கலந்து.

இறுதியாக கூறினாய்
அன்பினில் சங்கமிப்பதே
யெளவனம்!

2 comments:

sathishsangkavi.blogspot.com said...

//கட்டுடலும்
காதல் நிறைந்த
கண்களும்
கவர்ந்திழுக்கும்
புன்னகையும் கொண்டிருக்கும்
காதலின் நுழைவாயிலா
கேட்டேன்//

படித்தேன் ரசித்தேன்..

இன்றைய கவிதை said...

யெளவனம் மனதின் வயது , மனதில் அன்பிருப்பின் முதுமை தெரியா, மூத்தபின்னும் நேசம் இளக வைக்கும் இளமையாக்கும்

அருமை கல்யாணி சுரேஷ்

நன்றி ஜேகே

Post a Comment