துளி 17
பித்து பிடிக்கச் செய்துவிட்டாய் என்று
கோபித்துக் கொண்ட பொழுதில்
முத்தத்தைக் கையூட்டாக கொடுத்து
தப்பிச் செல்லும்
குழந்தையைப் போலும்
நழுவிச் செல்கிறாய்
விழிகள் ஒளிரும்
ஆழமானதொரு புன்னகையை
பரிசளித்தபடி
.
மலை ஏறி இறங்குபவர்
1 week ago
2 comments:
ஹாய் விஜி , கவிதை நன்றாகவே உள்ளது.
ஆனாலும் சமுதாய விழிப்புணர்வு சார்ந்த
கவிதைகளும் எதிர்பார்கிறேன் . மேலும்
பல கோணங்களிலும் கவிதைகளை நீ
எழுத வேண்டுமென்று நான் எதிர்பார்கிறேன் .
...................ஜே
கவிதை நன்று.தொடர்ந்து எழுதுங்கள்..வாழ்த்துகள்..
நேரமிருந்தால் எனது தளம் வந்து வாசித்து கருத்திட அழைக்கிறேன்..
மதுமதி கவிதைகள்
Post a Comment