Wednesday 9 September 2009

புரிதல் என்னும் இழை


வார்த்தைகள் மரித்துப் போக
வாய் மூடி மௌனியாகின்றோம்

உனது தரப்பை நீயும்
எனது தரப்பை நானும்
மௌனத்தால் வாதிடுகிறோம்

'சாப்பிட்டாச்சா?'

'கடைக்கு கிளம்பியாச்சா?'

'தலைவலி சரியாகிடுச்சா?'

வந்து விழுகின்றன
கேள்விகள்
சம்பிரதாயமாய்...

புரிதல் என்னும்
இழைதான்
இழுத்து நிறுத்துகிறது,
எதிரெதிர் துருவங்களை
நோக்கி நகர்கின்ற
நம்மையும்
நம் நட்பினையும்!





9 comments:

+Ve Anthony Muthu said...

// உனது தரப்பை நீயும்
எனது தரப்பை நானும்
மௌனத்தால் வாதிடுகிறோம் //

இதான் நச் வரி.

மொத்தமாய் சூப்பரோ சூப்பர்.

சாம் தாத்தா said...

சபாஷ்! ஒற்றைக் குயிலா? குயில் கூவட்டும்.
குயிலின் குரலைக் கேட்க அடிக்கடி வந்து போவேன்.

சாம் தாத்தா said...

அப்புறம் ஒரு முக்கிய (அ) முக்காத கேள்வி? :-)(வயசானவன்மா.) ஆமா...? ஏன் பெரும்பலான கவிதைகள் ஏதோ ஒரு சொல்ல முடியாத சோகத்தையே எதிரொலிக்கின்றன?

கல்யாணி சுரேஷ் said...

நன்றி அண்ணா.

கல்யாணி சுரேஷ் said...

கண்டிப்பா வாங்க. வந்து உங்க கருத்தையும் சொல்லுங்க.

சோகம் கூட ஒரு சுகம்தானே
நன்றி வருகைக்கும் கருத்தினுக்கும்

கண்ணன் said...

புரிதல் பற்றிய புரிதல் கவிதை அருமை

கல்யாணி சுரேஷ் said...

நன்றி கண்ணன்.

நர்சிம் said...

நன்று

கல்யாணி சுரேஷ் said...

நன்றி நர்சிம்

Post a Comment