Tuesday 13 October 2009

ப(ம)றந்து போன பச்ச கிளி

கண்ணுக்குள்ள
பொத்திவச்ச மவ
எங்கண்ண மறச்சுப்புட்டு
காணாம போயிபுட்டா

நெஞ்சுக் குழிக்குள்ள
நெருப்பள்ளி போட்டு
நெல கொலய வச்சுப்புட்டா

பதியம் போட்டு
பாத்து பாத்து வளர்த்த
பட்டு ரோசா
பூத்து சிரிக்கறத
பாக்க காத்திருந்தேன்
கண்ணசந்த வேளையில
களவு போனதென்ன?

பாலூட்டி வளர்த்த
எம் பச்ச கிளி
பொல்லாத பூனையோட
கை புடிச்சு போனதென்ன?

பாவி மவளுக்கு பந்த பாசம்
இல்லாம போனதென்ன?

பைத்தியம் புடிச்சதாட்டம்
நான் பரிதவிச்சு நிப்பதென்ன?



.

13 comments:

வேல் கண்ணன் said...

அட பய புள்ள..... இம்புட்டு திறமையிருக்கா ..
மக்கா தெரியமா போச்சே.. நல்ல இருக்கு புள்ள

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்கு. இதுபோல ஓடிப் போன பெண்கள் வீட்டாரின் நிலையை நான் நேரில் கண்டும் இருக்கின்றேன். தங்களின் கவிதை வரிகள் அருமை. நான் முதலில் இறந்துவிட்ட பெண்ணின் தாயார் என்று நினைத்தேன். (இதுக்கு அவ செத்துருக்கலாம்).
காதலித்தால் நின்று போராடி ஜயிக்க வேண்டும், அதுக்கு காதலில் உறுதியும், போராடும் பொறுமையும் வேண்டும். ஓடிப்போவது கோழைகளின் செயல்.

விஜய் said...

தாயின் பரிதவிப்பு.

நெகிழ்ந்தேன்

வாழ்த்துக்கள்

விஜய்

அன்புடன் நான் said...

தாயின் சோகம் இயல்பான பதிவு. நன்று!

R.Gopi said...

ஓடிப்போன பெண்...

பொத்தி பொத்தி வளர்த்த தாய்.. அவரின் புலம்பல் மிக அழகாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது....


வாழ்த்துக்கள் கல்யாணி சுரேஷ்...

RAMYA said...

//
கண்ணுக்குள்ள
பொத்திவச்ச மவ
எங்கண்ண மறச்சுப்புட்டு
காணாம போயிபுட்டா

நெஞ்சுக் குழிக்குள்ள
நெருப்பள்ளி போட்டு
நெல கொலய வச்சுப்புட்டா
//



வலி மற்றும் வேதனை நிறைந்த வரிகள்
கண்களில் நீர் வந்து விட்டது :((

இன்றைய கவிதை said...

பொத்தி வச்ச மகளுக்கு
'காதல்' பத்திகிச்சி!

பொத்தி வச்சதுக்கு
பதிலா புட்டு புட்டு வெச்சிருந்தா
புலம்பியிருக்க வேணாம்!

பதியம் போட்டு வச்சாலும் ரோஜா
மலரந்துதான் போகும்!
தாயான உனக்கு இது
தெரியாமலா போகும்?!
தெரிந்த பின்னும்
சும்மாயிருந்தா
பறந்துதான் போகும்!

மனச விரிச்சு வச்சா
வாழ்க்கை சுகமாகும்!
உறவும் நம் வசமாகும்...!

கல்யாணி சுரேஷ் said...

கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகளும், மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகளும்.

நிலாரசிகன் said...

நல்ல கவிதை.
இதை படித்தவுடன் என் பழைய கவிதையொன்று நினைவில் மலர்ந்தது.

நான் பெத்த மகளே: http://www.nilaraseeganonline.com/2005/11/blog-post.html

பா.ராஜாராம் said...

ஐ!புதுசா இருக்கே கல்யாணி,இந்த மொழி!

கல்யாணி சுரேஷ் said...

@ நிலாரசிகன்
நன்றி நிலாரசிகன்.
@ பா.ராஜாராம்
நன்றி அண்ணா.

திருவாரூர் சரவணா said...

வசதியற்ற குடும்பங்களில் குழந்தைகளைத்தான் பெரிய சொத்தாக நினைத்திருப்பார்கள். இதைப் போன்ற இடி இறங்கும்போது அவர்களால் ஜீரணிக்க முடிவது சிரமமே...(மற்ற குடும்பங்களில் உள்ள பெண்கள் தானே வாழ்க்கைத் துணியை தேடிக்கொண்டால் பரவாயில்லையா என்று கேட்காதீர்கள்.) யாரை குற்றம் சொல்வது? நம் சமூக அமைப்பு கண்ணுக்குத் தெரியாத சங்கிலியாக அல்லவா இருக்கிறது.

கல்யாணி சுரேஷ் said...

@ சரண்
தேர்ந்தெடுக்கும் துணை சரியான தேர்வாக இருக்கும் பட்சத்தில் தன் துணையை தானே தேர்ந்தெடுப்பதில் தவறேதும் இல்லை. (அதனாலதான் ...........பொல்லாத பூனையோட............. சொல்லியிருக்கேன்.)

Post a Comment