Monday, 3 May 2010
வானவில் தருணம்.
நீள்கின்ற மௌனக்கோடு
இயம்புகிறது
இருவருக்குமான இடைவெளியை
சிறைப்பட்டிருக்கும் வார்த்தைகளை
விடுவிப்பதற்கான சாவி
உன்னிடமிருப்பதாய் நானும்
என்னிடமிருப்பதாய் நீயும்
பாவனை செய்கிறோம்
சிறு விசும்பல்
அழிக்கக் கூடும்
மௌனக் கோட்டினை
ஒற்றைத் துளி
உடைக்கக் கூடும்
சிறைக் கதவுகளை
ஊடல் உடைபடுமொரு
வானவில் தருணத்திற்கென
காத்திருக்கிறோம் உள்ளபடியே.
.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
இன்று வாசித்த மிக சிறந்த கவிதை இது.
fantastic kalyani!
நல்லாயிருக்கு கவிதை..
நல்லாயிருக்குங்க.
அழகான கவிதை... ஊடலே ஒரு கவிதை தான்... அதை பத்தி ஒரு கவிதை இன்னும் அழகு... (எல்லாம் சரி, ஊடல் சரி ஆச்சா இல்லையா கல்யாணி சிஸ்டர்)
ரொம்ப நல்லா இருக்குங்க....
யதார்த்தம்.....
பாராட்டுக்கள்.
அனைவருக்கும் நன்றி.
அருமைங்க... வாழ்த்துக்கள்
Post a Comment