Monday 23 May 2011

ஆலமும் அமிர்தமும்

துளி 10.


உனது பொழுதுகளை களவாடிப்
போன

தாக
குற்றம் சுமத்தித் திரிகிறாய்

அந்த பொழுதுகளோடு
நானும் இருப்பதை
ஏனோ நீ உணர்வதேயில்லை

உன் தூக்கத்தைப்
பறித்துக் கொண்டதாக
கோபித்துக் கொள்கிறாய்

பறி
போன
தூக்கத்தின் கனவுகளை மட்டும்
திரும்ப தரச்சொல்லி கெஞ்சுகிறாய்

உன் வேலைகளுக்கிடையே
நுழைந்து
கலகமூட்டுவதாக
குறை சொல்லிப்
போகிறாய்

அன்றாட மகிழ்வே நானென
தலையில் வைத்து
கூத்தாடவும்
செய்கிறாய்.




.

1 comment:

vgnesh89 said...

Wow:) it's really so nice:-):-):) disturbance kooda ivlo azhaga kavithaiya sollirukinga., :-):-):-).

Post a Comment