கவிந்திருக்கும்
கோபத்தையும்
கணநேரப்
புன்னகையில்
கரைத்து விடுவான்...
வலிகள் தந்து - பின்
வசந்தமும் தருவான்...
சிறுசிறு சண்டைகளிட்டு
மனம் சிதறச் செய்வான்...
மனதின் ரணங்களை
மலர்கர வருடலினால்
மரிக்கச் செய்வான்...
அழ அழச் செய்து,
திரும்பி வந்து
பின்கழுத்தை
கட்டிக்கொண்டு
காதோரமாய் சொல்வான்
'I LOVE YOU'
அம்மா!
தமிழ் இலக்கியத்தின் மறக்கப்பட்ட பாதி - விதூஷ்
4 weeks ago






3 comments:
ஒற்றை வரியில் மறந்து போகும்
துயர் அனைத்தும்
அருமை
ஒற்றைக்குயில் அழகாகக் கூவுகிறது.
nanri kannan.
varugaikkum paarattukkum nanri goma.
Post a Comment